தமிழர் பாரம்பரிய கலையை மீட்டெடுக்கும் காவடி போட்டிகள்

தமிழர் பாரம்பரிய கலையை மீட்டெடுக்கும் காவடி போட்டிகள்

தமிழர் பாரம்பரிய கலையை மீட்டெடுக்கும் காவடி போட்டிகள்
Published on

தமிழகத்தில் முதல் முறையாக தமிழர் பாரம்பரிய கலையை ஊக்குவிக்கும் வகையில் காவடி போட்டிகள் கோவையில் நடைபெற்று வருகிறது.

தமிழக அரசின் கலை பண்பாட்டு துறை  மற்றும் சங்கமம் கலைக்குழு சார்பில் மாவட்ட அளவிலான காவடி போட்டிகள் கோவை கருமத்தம்பட்டி அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்று வருகிறது.  தலையில், கழுத்தில் வைத்து காவடி ஆடுதல், மயிலாட்டம், கண்ணில் பணம் எடுத்தல், குளிர்பானம் அருந்துதல், ஏணி, நாற்காலி மீதேறி ஆடுதல் என 10க்கும் மேற்பட்ட பிரிவுகளில் 12 குழுவை சார்ந்த 400 பேர் இந்த போட்டியில் கலந்துகொண்டு உள்ளனர். 3 வயது சிறுவர் முதல் 60 வயதுள்ளவர்கள் வரை பங்கேற்கும் இந்தப் போட்டியில் 10க்கும் மேற்பட்ட பெண்களும் பங்கேற்றுள்ளனர்.

சிறுவர்கள் தோலில் காவடியை சுமந்துகொண்டு சர்வ சாதாரணமாக ஆடியதும், ஏணியின் மேல் ஏறி காவடி ஆடியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. போட்டியாளர்களின் உடை, ஆடும் முறை, பாவனை, குழுவின் பறை இசை, அலங்காரம், காவடி ஆடுவதில் உள்ள நேர்த்தி, குறிப்பிட்ட நேரத்திற்குள் கொடுக்கப்பட்ட பிரிவுகளை முடித்தல் என பல்வேறு வகைகளில் போட்டிக்கான புள்ளிகள் வழங்கப்படுகிறது. 4 நடுவர்கள் இந்த போட்டியாளர்களை தேர்வு செய்கின்றனர். புள்ளிகள் அடிப்படையில்  தேர்வு செய்யப்படும் வெற்றிபெற்ற அணிகளுக்கு கோப்பைகள், சான்றிதழ்கள், பதக்கங்கள், நினைவு பரிசுகள் வழங்கப்படுகிறது. இறை வழிபாடாக இருந்து வந்த நாட்டுப்புற கலைகளின் ஒன்றான இந்த காவடி ஆட்டத்தை போட்டியாக அடுத்தக்கட்டத்திற்கு எடுத்து செல்வது மகிழ்ச்சி அளிப்பதாகவும், தமிழகம் முழுவதும் மாநில அளவிலான போட்டிகள் வரை நடத்த வேண்டும் என்பது கலைஞர்களின் கோரிக்கையாக உள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com