ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்கு தமிழாசிரியர்கள் ஒருநாள் ஊதியம்

ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்கு தமிழாசிரியர்கள் ஒருநாள் ஊதியம்

ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்கு தமிழாசிரியர்கள் ஒருநாள் ஊதியம்
Published on

ஹார்வர்ட் பல்கலை.யில் தமிழ் இருக்கை அமைய உதவியாக தமிழாசிரியர்கள் அனைவரும் தங்களது ஒருநாள் ஊதியத்தை வழங்குவதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

உலகத் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கிறது 350 ஆண்டுகள் பழமையான ஹார்வர்ட் பல்கலைக்கழகம். அதில் 2,500 ஆண்டுகள் பழமைவாய்ந்த தமிழ் மொழிக்கு இருக்கை அமைக்கும் முயற்சி கடந்த 3 ஆண்டுகளாக நடந்து வந்தது. தற்போது தமிழுக்கு இருக்கை அமைக்க ஹார்வர்ட் பல்கலைக்கழகம் ஒப்புதல் அளித்துள்ள நிலையில் அதற்காக உலகம் முழுவதும் நிதி திரட்டப்பட்டு வருகிறது. இதற்காக தமிழக அரசு ரூ.10 கோடியை நிதியாக வழங்கியது. நடிகர் விஷால் ரூ.10 லட்சம் அளித்தார். கமல் 20 லட்சம் வங்கினார். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், கனடாவில் நடத்திய இசை நிகழ்ச்சி மூலம் கிடைத்த பணத்தை நிதியாக வழங்கியிருந்தார்.

இந்நிலையில் ஹார்வர்ட் பல்கலை.யில் தமிழ் இருக்கை அமைய உதவியாக தமிழாசிரியர்கள் அனைவரும் தங்களது ஒருநாள் ஊதியத்தை வழங்குவதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். மொத்தமாக 2 கோடி ரூபாயை அவர்கள் நிதி உதவி அளிக்க உள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com