2021ஆம் ஆண்டுக்கான தமிழ்ப்பேராய விருதுகளை வழங்கினார்  பாரிவேந்தர் எம்.பி

2021ஆம் ஆண்டுக்கான தமிழ்ப்பேராய விருதுகளை வழங்கினார் பாரிவேந்தர் எம்.பி

2021ஆம் ஆண்டுக்கான தமிழ்ப்பேராய விருதுகளை வழங்கினார் பாரிவேந்தர் எம்.பி

எஸ்.ஆர். எம். பல்கலைகழகத்தின் 2021ஆம் ஆண்டுக்கான தமிழ்பேராய விருதுகள் வழங்கப்பட்டன.

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் பெரம்பலூர் தொகுதி மக்களவை உறுப்பினரும், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக நிறுவனருமான பாரிவேந்தர் கலந்துகொண்டு விருதுகளை வழங்கினார். இந்த ஆண்டு புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது ’கங்காபுரம்’ நூலை படைத்த அ. வெண்ணிலாவுக்கும், ’சுளுந்தீ’ நூலை எழுதிய இரா.முத்துநாகு ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. பாரதியார் கவிதை விருது ’குறிஞ்சிப் பூக்கள்’ நூலைப் படைத்த கடவூர் மணிமாறனுக்கு வழங்கப்பட்டது

அழ.வள்ளியப்பா குழந்தை இலக்கிய விருது ’மழலையர் மணிப்பாடல்கள்’ என்ற நூலை எழுதிய வெற்றிச்செழியனுக்கு வழங்கப்பட்டது.

’நாலடியார்’ நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பழனி அரங்கசாமிக்கு ஜி.யூ.போப் மொழிபெயர்ப்பு விருதும், ’எந்திரத் தும்பிகள்’ என்ற புத்தகத்தை எழுதிய விஞ்ஞானி வி. டில்லிபாபுவுக்கு ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் அறிவியல்/தொழில்நுட்ப விருதும் அளிக்கப்பட்டன.

முத்துத்தாண்டவர் தமிழிசை விருது டி.கே.எஸ் கலைவாணனுக்கும், அறிவு பற்றிய ’தமிழரின் அறிவு’ என்ற படைப்பிற்காக பரிதிமாற் கலைஞர் தமிழ் ஆய்வறிஞர் விருது சி.மகேந்திரனுக்கும் வழங்கப்பட்டது.

முத்தமிழ் அறிஞர் கலைஞர் சமூகநீதி விருது சி.மகேஸ்வரனுக்கும், சுதேசமித்திரன் தமிழ் இதழ் விருது தென்மொழி இதழின் ஆசிரியர் முனைவர் மா.பூங்குன்றனுக்கும் வழங்கப்பட்டன.

தொல்காப்பியர் தமிழ்ச்சங்க விருது ராஜபாளையம் மணிமேகலை மன்றத்தின் கொ.மா. கோதண்டத்திற்கு வழங்கப்பட்டது.

அருணாசலக் கவிராயர் விருது ஆத்மநாதன் தமிழ் இசைக் குழுவின் ஜீ.ஆத்மநாதனுக்கும், பாரிவேந்தர் பைந்தமிழ் விருது மூத்த தமிழறிஞர் பா.வளன் அரசுவுக்கும் வழங்கப்பட்டன.

இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் மற்றும் கவிஞர் வைரமுத்து கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com