சட்டம் ஒழுங்கு நன்றாக இருந்தால்தான் தமிழகம் அமைதியாக இருக்கும் - அண்ணாமலை

சட்டம் ஒழுங்கு நன்றாக இருந்தால்தான் தமிழகம் அமைதியாக இருக்கும் - அண்ணாமலை

சட்டம் ஒழுங்கு நன்றாக இருந்தால்தான் தமிழகம் அமைதியாக இருக்கும் - அண்ணாமலை
Published on

சட்டம் ஒழுங்கு நன்றாக இருந்தால்தான் தமிழகம் அமைதியாக இருக்கும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்திருக்கிறார்.

நெல்லையில் புதிதாக திறக்கப்பட்டுள்ள பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட அலுவலகத்தை பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “அடுத்த மூன்று மாதத்தில் தமிழகத்தில் நிர்வாக ரீதியாக உள்ள பாரதிய ஜனதா கட்சி மாவட்டங்களில் 19 இடங்களில் புதிய கட்சி அலுவலகம் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட உள்ளது.

சட்டம் ஒழுங்கு நன்றாக இருந்தால்தான் தமிழகம் அமைதியாக இருக்கும். தற்போதும் தமிழகத்தில் அடிப்படைவாதிகள் இயங்கி வருகின்றனர், தமிழகத்தில் காவல்துறை பணிசெய்ய தமிழக அரசு அனைத்து வழிகளையும் செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார்.

மேலும், “தமிழக அரசு உதவி ஆய்வாளர்களுக்கு போதிய அதிகாரம் கொடுக்கவில்லை, இதுவரை பார்த்திராத பல்வேறு வழக்குகளை தற்போது தமிழகம் சந்தித்து வருகிறது. தமிழகத்தில் எந்த நேரத்தில் உள்ளாட்சித் தேர்தல் வந்தாலும் பாஜக தயார் நிலையில் உள்ளது,  உள்ளாட்சி தேர்தலை பாஜக கட்சியை வளர்க்க வாய்ப்பாக பார்க்கிறது. அனைத்து இடங்களிலும் பாஜக வெற்றி பெறும் என சொல்லவில்லை, ஆளும் கட்சியின் பண பலம் படை பலம் ஆகியவையும் உள்ளது.

இப்போது திமுக ஆட்சியில் தமிழகத்தில் கமிசன், கரப்சன் ஆகியவை தலை தூக்கி வருகிறது. அதிமுக பாஜக கூட்டணி ஒரே கப்பலில் பயனம் செய்கிறது. கப்பல் நன்றாக நேராக போய்கொண்டிருக்கிறது, அதிமுக -பாஜக கூட்டணி திமுக - காங்கிரஸ் கூட்டணி போன்று இல்லை. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை கலைத்துவிட்டு திமுகவுடன் இணைத்துகொண்டால் மக்கள் வாக்காளிக்கும் போது சின்னத்தை பார்த்து குழம்பாமலாவது இருப்பார்கள்.தமிழக காங்கிரஸ் கட்சிக்கு காங்கிரஸ் கட்சியின் தன்மையே இல்லை, திமுகவின் பி - டீமாக தான் தமிழக காங்கிரஸ் கட்சி செயல்படுகிறது” என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com