''தொடர்மழை இருக்கும்.. கனமழையாக உருவெடுக்கும்'' - தமிழ்நாடு வெதர்மேன்

''தொடர்மழை இருக்கும்.. கனமழையாக உருவெடுக்கும்'' - தமிழ்நாடு வெதர்மேன்
''தொடர்மழை இருக்கும்.. கனமழையாக உருவெடுக்கும்'' - தமிழ்நாடு வெதர்மேன்

தற்போது சென்னையிலும் தமிழ்நாட்டின் பல இடங்களிலும் பரவலாக மழை பெய்துவருகிறது. இந்த மழை விடிய விடிய தொடர்ந்து காலையில் இரண்டு மடங்காக அதிகரிக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.

இன்று காலையிலிருந்து மாலை 5.30 மணிவரை தூத்துக்குடி மாவட்டத்தின் மழை அளவு 169 மி.மீட்டரை எட்டியுள்ளது. நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களை ஒட்டியுள்ள பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. தற்போது மழை நின்றிருந்தாலும், மீண்டும் மழை தொடரும் வாய்ப்புகள் அதிகம். இதனால் நாளை காலைக்குள் தூத்துக்குடி பகுதிகளில் மழையின் அளவு இரண்டு மடங்காக அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.

தற்போது தமிழக உள்மாவட்டங்களான நாமக்கல், சேலம், ஈரோடு மற்றும் தருமபுரி ஆகிய மாவட்டங்களில் மழை தொடங்கியுள்ளது. தெற்கு மாவட்டங்களான மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை போன்ற மாவட்டங்களில் மழை பெய்துவருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்திலும் நள்ளிரவிலிருந்து காலை வரை நல்ல மழை பெய்துவருகிறது. எனவே பெரும்பாலான தமிழக மாவட்டங்களில் இன்று இரவு மழைபெய்யும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

கிழக்கு சென்னை மற்றும் கடற்கரைப் பகுதிகளில் சூழ்ந்துள்ள மேகமூட்டத்தை வைத்து பார்க்கும்போது, தற்போது பெய்துவரும் மழையானது அடுத்த சில மணிநேரங்களில் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு அளவில் பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொடர்மழையானது விட்டுவிட்டு கனமழையாகப் பெய்யக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களிலும் மழைபெய்யும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com