“குண்டுவெடிப்பு நிகழ்த்திய அமைப்புடன் தொடர்பு இல்லை” - தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் விளக்கம்

“குண்டுவெடிப்பு நிகழ்த்திய அமைப்புடன் தொடர்பு இல்லை” - தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் விளக்கம்
“குண்டுவெடிப்பு நிகழ்த்திய அமைப்புடன் தொடர்பு இல்லை” - தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் விளக்கம்

இலங்கை குண்டு வெடிப்பில் தொடர்புடையதாக கூறப்படும் தேசிய தவ்ஹித் ஜமாத்திற்கும் தங்களுக்கும் 
எந்த வித தொடர்பும் இல்லை என தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் கூறியுள்ளது. 

இதுகுறித்து தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் மாநில தலைவர் சம்சீர்லுகா புதிய தலைமுறைக்கு அளித்த சிறப்பு பேட்டியில், “
இலங்கையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கும், தேசிய தவ்ஹித் ஜமாத்திற்கும் தொடர்பு இருப்பதாக ஒரு ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது. மேலும் அதில் தேசிய தவ்ஹித் ஜமாத்தின் பின்னணியில் ஸ்ரீலங்கன் தவ்ஹித் ஜமாத் மற்றும் தமிழ்நாடு ஜமாத் தவ்ஹித் ஜமாத்தும் இருப்பதாக செய்தி வெளியிட்டிருந்தது. இந்த செய்தியை தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் வன்மையாக கண்டித்தது. மேலும் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் பெயரை சேர்த்ததற்கு அந்த ஆங்கில நாளிதழ் மறுப்பு செய்தியும் வெளியிட்டிருந்தது. 

எந்த ஒரு இஸ்லாமியரும் வழிபாட்டு தலங்களிலும் அசம்பாவிதங்களையும் செய்ய மாட்டார்கள். இலங்கை குண்டு வெடிப்பில் எந்த அமைப்பினர் செய்திருந்தாலும் அவர்களை நாங்கள் கண்டிக்கிறோம். ஒருவர் தன்னையே அழித்து கொள்கிறார் என்றார் அவர் இஸ்லாமியராக இருக்க முடியாது. இறை நம்பிக்கை உள்ள எந்த முஸ்லீமும் இதுபோன்ற செயலில் ஈடுபட மாட்டார்கள். இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் பெயரை இணைத்திருப்பது கண்டனத்திற்குரியது” என்று கூறினார். 

மேலும், இதுகுறித்து தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத்தின் மாநில பொது செயலாளர் முகமது பேசுகையில், “இலங்கையில் நடந்த துயர சம்பவத்தில் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத்தும் எங்களுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம். இந்த குண்டு வெடிப்பில் ஸ்ரீலங்கன் தவ்ஹித் ஜமாத் பின்னணியில் இருப்பதாகவும், இதன் பின்னணியில் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் இருப்பதாக கூறியுள்ளார்கள். குண்டு வெடிப்பு சம்பவத்தில் தேசிய தவ்ஹித் ஜமாத் மீது சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால் தேசிய தவ்ஹித் ஜமாத்திற்கும், ஸ்ரீலங்கன் தவ்ஹித் ஜமாத்திற்கும், தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத்திற்கும் எந்த வித தொடர்பும் இல்லை. 

தமிழ்நாட்டில் தீவிரவாதத்தை எதிர்க்கும் அமைப்பாகவும், மக்கள் நல சேவையில் ஈடுபடும் அமைப்பாக தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் அமைப்பு செயல்பட்டு வருகிறது. இதேபோல இலங்கையில் எங்களுடைய கொள்கைகளை வெளிப்படுத்தும் அமைப்பாக ஸ்ரீலங்கன் தவ்ஹித் ஜமாத் உள்ளது. இது அந்த அரசாங்கத்திற்கும் தெரியும். குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு பிறகு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஸ்ரீலங்கன் தவ்ஹித் ஜமாத் சார்பில் ரத்ததானம் செய்யப்பட்டுள்ளது. 

எங்களுக்கும், ஸ்ரீலங்கன் தவ்ஹித் ஜமாத்திற்கும் கொள்கை ரீதியான தொடர்பு உள்ளது. ஆனால் குண்டு வெடிப்பில் தொடர்புடையதாக கூறப்படும் தேசிய தவ்ஹித் ஜமாத்திற்கும், தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத்திற்கும், ஸ்ரீலங்கன் தவ்ஹித் ஜமாத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. தவ்ஹித் ஜமாத் என்ற பெயர் கொண்டிருப்பதால் வந்த குழப்பமே இது” என அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com