”அரியலூர் மாணவி தற்கொலை குறித்து பொய்களை விதைப்பது வருத்தம் அளிக்கிறது” - பள்ளி குழுமம்

”அரியலூர் மாணவி தற்கொலை குறித்து பொய்களை விதைப்பது வருத்தம் அளிக்கிறது” - பள்ளி குழுமம்

”அரியலூர் மாணவி தற்கொலை குறித்து பொய்களை விதைப்பது வருத்தம் அளிக்கிறது” - பள்ளி குழுமம்

அரியலூர் மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் காவல்துறை மற்றும் கல்வி துறையின் விசாரணைக்கு பள்ளி நிர்வாகம் துணை நிற்கும் என தனியார் பள்ளி குழுமம் உறுதி அளித்துள்ளது. அதேபோல பொய்களை விதைப்பது பெரிதும் வருத்தம் அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரியலூரைச் சேர்ந்த மாணவி தஞ்சை தனியார் பள்ளி யில் தங்கி படித்துக் கொண்டிருந்த நிலையில், தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்கு முன் மாணவி பேசியதாக வெளியான வீடியோவின் உண்மைத் தன்மை குறித்து ஆய்வு நடைபெற்று வரும் நிலையில், புதுச்சேரியில் உள்ள தனியார் பள்ளிக்குழுமத்தின் நிர்வாக சபை தலைவி பாத்திமா பவுலா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். மாணவியின் இறப்பு பள்ளிக்கும் பள்ளி நிர்வாகத்திற்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு என்றும், அந்த மாணவி விடுமுறையில் கூட வீட்டிற்கு செல்ல விருப்பமில்லாமல், தங்களோடு தங்கியிருந்ததாகவும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

விடுதி காப்பாளர் மீது மாணவி குற்றம் சுமத்தியதாக அறிவதாகவும், எனவே இதுதொடர்பாக சட்ட விசாரணைகளுக்கு பள்ளி நிர்வாகம் எப்போதும் துணை நிற்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். அதேசமயம் இந்த விவகாரத்தை சில பிரிவினர் அரசியலுக்காக கையில் எடுப்பதும், பொய்களை விதைப்பதும், களங்கம் விதைப்பதும் பெரிதும் வருத்தம் அளிப்பதாக தெரிவித்துள்ளார். மதங்களை கடந்து மனித மாண்பின் அடிப்படையில் செயல்படும் தங்களை கொச்சைப்படுத்துவது மிகவும் வருத்தமளிப்பதாகவும் பாத்திமா பவுலா தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com