தமிழக அரசின் சின்னமான தமிழ்மறவன் பட்டாம்பூச்சி 

தமிழக அரசின் சின்னமான தமிழ்மறவன் பட்டாம்பூச்சி 

தமிழக அரசின் சின்னமான தமிழ்மறவன் பட்டாம்பூச்சி 
Published on

தமிழ்மறவன் பட்டா‌ம்பூச்சியை, தமிழக அரசு சின்னமாக அறிவித்து அரசாணை பிறப்பித்துள்ளது.

தமிழக அரசு சின்னங்களாக ஸ்ரீவில்லிபுத்தூர் கோயி‌ல் கோபுரம், பனைமரம், வரையாடு, மரகதப் புறா, செங்காந்தள் மலர், பலாப்பழம், பரதம், கபடி ஆகியவை உள்ளன. தற்போது அந்த வரிசையில் தமிழ் மறவன் பட்டாம்பூச்சியும் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்தப் பட்டாம்பூச்சியை தமிழக அரசின் சின்னமாக அறிவிக்கக் கோரி முதன்மைத் தலைமை வனப் பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரினப் பாதுகாவலர் பரிந்துரை செய்தனர். இதனைப் பரிசீலத்த தமிழக அரசு அதனை சின்னமாக அறிவித்து ஆணை பிறப்பித்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com