பீரங்கி சோதனை ஓட்டம் செய்ததில் தமிழக ராணுவ வீரர் உயிரிழப்பு

பீரங்கி சோதனை ஓட்டம் செய்ததில் தமிழக ராணுவ வீரர் உயிரிழப்பு
பீரங்கி சோதனை ஓட்டம் செய்ததில் தமிழக ராணுவ வீரர் உயிரிழப்பு

சென்னை ஆவடி கனரக தொழிற்சாலையில் தீயணைப்பு கருவி வெடித்ததில் ராணுவ வீரர் உயிரிழந்தார். 

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த சிவசக்திவேல், இந்திய பாதுகாப்பு துறைக்குச் சொந்தமான ஆவடி கனரக தொழிற்சாலையில் ஜவானாக உள்ளார். சிவசக்திவேல், இரண்டு ராணுவ வீரர்களுடன் வழக்கம்போல், டி72 ரக பீரங்கியைச் சோதனை ஓட்டத்திற்காக வெள்ளாணூர் அருகே உள்ள மைதானத்திற்குக் கொண்டு சென்றிருக்கிறார். மைதானத்தில் சோதனை ஓட்டம் செய்தபோது, தீயணைப்பு கருவி வெடித்து வாயு வெளியானதில் சிவசக்திவேல் மயக்கமடைந்ததாகக் கூறப்படுகிறது.

மற்ற இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நிலையில், சிவசக்திவேலை ராணுவ மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர். சிவசக்திவேலை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com