\
நேற்றைய மதுவிற்பனை விவரம்: மதுரை மண்டலம் முதலிடம்!!

நேற்றைய மதுவிற்பனை விவரம்: மதுரை மண்டலம் முதலிடம்!!

நேற்றைய மதுவிற்பனை விவரம்: மதுரை மண்டலம் முதலிடம்!!
Published on: 

தமிழகத்தில் நேற்று, டாஸ்மாக் கடைகளில் ரூ.163 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

டாஸ்மாக் வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் தமிழக அரசு டாஸ்மாக் கடைகளைத் திறப்பதற்கு உயர்நீதிமன்றம் விதித்த தடையை நீக்கியது. அத்துடன் கட்டுப்பாடுகளுக்கு இடைக்கால தடைவிதித்தது.

இதனையடுத்து நேற்று முதல் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களை தவிர மற்ற இடங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு விற்பனை நடைபெற்றது. இந்நிலையில் தமிழகத்தில் நேற்று, டாஸ்மாக் கடைகளில் ரூ.163 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் ரூ.44.7 கோடிக்கும், சேலம் மண்டலத்தில் ரூ.41.07 கோடிக்கும், திருச்சியில் ரூ.40.5 கோடிக்கும், கோவையில் ரூ.33.05 கோடிக்கும் மது விற்பனை நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com