\
Tamil Nadu Schools Declared Holiday Due to Heavy Rainfall
பள்ளி விடுமுறைAI

கனமழை எதிரொலி | பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்தெந்த மாவட்டங்களுக்குத் தெரியுமா?

கனமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
Published on: 

வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் 15-ம் தேதி தொடங்கி தீவிரமடைந்து வரும் நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக,மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகள் மற்றும் கொடைக்கானல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக தண்ணீர் தேங்கியிருக்கிறது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியிருக்கின்றனர். இதற்கிடையில், வங்கக்கடலில் உருவாகியுள்ள அர்னாப் புயல் காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என அறிவித்திருக்கிறது.

heavy rain
heavy rainreuters

இந்த்ச்சூழலில் தான், தமிழகத்தில் கோயம்புத்தூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல, நீலகிரி மாவட்டத்தில், குன்னூர், கோத்தகிரி, உதகை, குந்தா ஆகிய தாலுக்காக்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. தேனியில் பெரிய குளம் தாலுகாவுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சியில், 2 தாலுகாவில் உள்ள 5 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

அதேபோல, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

Tamil Nadu Schools Declared Holiday Due to Heavy Rainfall
வங்கக்கடலில் உருவானது அர்னாப் புயல்.. இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com