தவாக தலைவர் வேல்முருகன் 327 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை

தவாக தலைவர் வேல்முருகன் 327 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை
தவாக தலைவர் வேல்முருகன் 327 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை

தமிழக வாழ்வுரிமை கட்சி வேட்பாளர் வேல்முருகன் 327 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், பண்ருட்டி தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகனுக்கும் அதிமுக வேட்பாளர் ராஜேந்திரனுக்கும் இடையே கடுமையான போட்டி நிழவி வருகிறது.

இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் அதிமுக வேட்பாளர் ராஜேந்திரன் தொடர்ந்து முன்னணியில் இருந்து வந்தார். பின்னர் இருவரும் மாறி மாறி முன்னிலை பெற்ற நிலையில் மீண்டும் வேல்முருகன் 327 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார்.

தமிழக வாழ்வுரிமை கட்சி வேட்பாளர் வேல்முருகன் 25,894 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் ராஜேந்திரன் 25,567 வாக்குகளும் பெற்றுள்ளார். இந்நிலையில் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com