ரூ.3ஆயிரத்து 600 கோடியை மத்திய அரசிடம் திருப்பி ஒப்படைத்த தமிழக அரசு!

ரூ.3ஆயிரத்து 600 கோடியை மத்திய அரசிடம் திருப்பி ஒப்படைத்த தமிழக அரசு!

ரூ.3ஆயிரத்து 600 கோடியை மத்திய அரசிடம் திருப்பி ஒப்படைத்த தமிழக அரசு!
Published on

2017-18ம் ஆண்டில் மத்திய அரசு ஒதுக்கிய நிதியில் ரூ.3,676 கோடியை தமிழகம் பயன்படுத்தாமல் திருப்பிக் கொடுத்துள்ளதாக சிஏஜி அறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது.

மாநில அரசின் பல்வேறு திட்டங்களுக்காக மத்திய அரசு நிதி ஒதுக்கி வருகிறது. அதன்படி தமிழகத்துக்காக மத்திய அரசு 2017-18ம் ஆண்டுக்காக ரூ. 5 ஆயிரத்து 920 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த தொகையில் ரூ.3ஆயிரத்து 676 கோடியை தமிழகம் மீண்டும் திருப்பிக் கொடுத்துள்ளது. அதாவது ரூ.2 ஆயிரத்து 243 கோடியை மட்டுமே தமிழகம் பயன்படுத்தியுள்ளது. 

சிஏஜி வெளியிட்ட அறிக்கையில் திட்டம் வாரியாக ஒதுக்கப்பட்ட நிதி குறித்து விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஆவாஸ் யோஜனா திட்டத்தின்கீழ் (housing scheme) மத்திய அரசு ரூ.3,082.39 கோடி ஒதுக்கியதாகவும் அதில் ரூ.728 கோடி மட்டுமே பயன்படுத்தப்பட்டு ரூ.2,354.38 கோடி திருப்பி அனுப்பப்பட்டதாக தெரிவித்துள்ளது. மேலும் சில திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி விவரங்களையும் சிஏஜி வெளியிட்டுள்ளது. அதன்படி,

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் திருப்பி அனுப்பப்பட்ட நிதி - ரூ.247.84 கோடி 

பெண்கள் முன்னேற்ற திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி - ரூ.23.84 கோடியை தமிழக அரசு அப்படியே திருப்பி அனுப்பியுள்ளது

ஊரக வளர்ச்சி திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி - ரூ.100 கோடி, அதில் பயன்படுத்தப்பட்ட நிதி - ரூ.2.35 கோடி. திருப்பி அனுப்பப்பட்ட நிதி - ரூ.97.65 கோடி 

வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பயனாளிகளை அடையாளம் காண்பதில் காலம் தாமதிக்கப்பட்டதே நிதி அதிக அளவில் திரும்ப அனுப்பப்பட முக்கிய காரணமாக இருந்துள்ளதாக சிஏஜி தெரிவித்துள்ளது. மேலும் நிதியை சரியாக பயன்படுத்த திட்டமில்லாமல் கால விரயம் செய்தது, வேலையில் வேகம் குறைவு, திட்டமிடப்பட்ட காலத்துக்குள் வேலைகள் முடிக்கப்படாமல் பாதியில் திட்டம் கைவிடப்பட்டது போன்ற குறைபாடுகளும் நிதியை திரும்ப அனுப்ப காரணங்களாக இருந்துள்ளதாக சிஏஜி குறிப்பிட்டுள்ளது.


 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com