\
Tamil Nadu Restricts RTI Access to Key Law and Order Data
RTIAI

RTI | சட்டம் ஒழுங்கு தகவலை பெற தமிழக அரசு கட்டுப்பாடு.. முழு விபரம்!!

சட்டம் ஒழுங்கு தொடர்பான சில முக்கியத் தகவல்களை, இனிமேல் RTI எனப்படும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வழங்க முடியாது என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
Published on: 

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 24(4)இன் கீழ், சட்டம்-ஒழுங்கு அடங்கிய பொது துறைக்கு இந்த விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, உளவு மற்றும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடும் அமைப்பாக இந்தத் துறையை அறிவித்து, அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. அதன்படி, சமூக - சாதி மோதல்கள், மாணவர்கள், விவசாயிகள், அரசியல் கட்சிகளின் ஆர்ப்பாட்டங்கள் தொடர்பான விவகாரங்கள் இனி தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வழங்கப்படாது. அதேபோல் அரசியல் காரணங்களால் பதிவு செய்யப்பட்ட வழக்குகள், காவல்துறையின் துப்பாக்கிச் சூடு, காவல் மரணங்கள் தொடர்பான விசாரணை அறிக்கைகளும் வழங்கப்படாது.

RTI
RTIPt wen

மேலும், சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் குறித்த விசாரணை ஆணைய அறிக்கைகள், அதன் பரிந்துரைகள் மீதான நடவடிக்கை, மாதாந்திர ஆய்வுக் கூட்டக் கோப்புகள் ஆகியவையும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெற முடியாது. சாதி மோதல்கள், அரசியல் போராட்டங்கள், மாணவர் போராட்டங்களின்போது பதிவு செய்யப்பட்டு, பின்னர் திரும்பப் பெறக்கோரும் கோரிக்கைக் கோப்புகள் ஆகியவையும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வழங்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரம், ஊழல், மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பான தகவல்களுக்கு இந்த விலக்கு பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிப்படையான நிர்வாகம் இருக்கும் என தமிழக அரசு கூறியிருந்த நிலையில், தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான இந்த அறிவிப்புக்கு அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு சமூக அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

Tamil Nadu Restricts RTI Access to Key Law and Order Data
மீண்டும் பேரழிவில் நேபாளம்|கொட்டும் மழை; கரைபுரண்ட ஆறுகள்; அடித்துச் செல்லப்பட்ட வீடுகள்!!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com