டிட்வா புயல்
டிட்வா புயல்pt web

Cyclone Ditwah | நாளை இரண்டு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்., வானிலை ஆய்வு மையத் தலைவர் அமுதா பேட்டி.!

தமிழ்நாட்டில், வடகிழக்கு பருவமழை இயல்பை விட 3% அதிகமாக பெய்திருப்பதாக வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் அமுதா தெரிவித்துள்ளார்.
Published on

தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியிருக்கும் டிட்வா புயலின் நிலை மற்றும் அதன் தாக்கம் குறித்து சென்னை நுங்கம்பாக்கத்தில், இந்தியா வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் அமுதா செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

அப்போது, “டிட்வா புயல் தற்போது தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு இலங்கை பகுதிகளில், வேதாரண்யத்திலிருந்து தென்கிழக்கே 110 கி.மீ. தொலைவிலும், காரைக்காலிலிருந்து தென்கிழக்கே 150 கி.மீ. தொலைவிலும், புதுவையிலிருந்து தெற்கு-தென்கிழக்கே 250 கி.மீ. தொலைவிலும், சென்னையிலிருந்து தெற்கே 350 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது, மேலும் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை அதிகாலை, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வடதமிழ்நாடு - புதுவை மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளுக்கு அருகே நிலவக்கூடும்.

அமுதா
அமுதாpt web

குறிப்பாக, டிட்வா புயல் வடக்கு-வடமேற்கு திசையில் நகரும் பொழுது, வட தமிழ்நாடு, புதுவை கடலோரப்பகுதிகளிலிருந்து, இன்று நள்ளிரவில் 60 கி.மீ. தொலைவிலும், நாளை அதிகாலை 50 கி.மீ. தொலைவிலும், மாலை 25 கி.மீ தொலைவிலும் நிலவக்கூடும்.

இன்று, நாகபட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய 5 மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் புதுச்சேரி, ஆகிய பகுதிகளுக்கு அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், பெரம்பலூர், அரியலூர், திருச்சிராபள்ளி, தஞ்சாவூர் திருவாருர், புதுக்கோட்டை ஆகிய 13 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டுள்ளது.

டிட்வா புயல்
150 தமிழர்கள் சிக்கித் தவிப்பு., ”இலங்கை அரசு எந்த உதவியும் செய்யவில்லை” - தமிழக பயணி குற்றச்சாட்டு!

நாளை திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய இரண்டு மாவட்டங்களுக்கு அதி-கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையும், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் திருவண்ணாமலை, விழுப்புரம், தர்மபுரி ஆகிய 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு மிக கனமழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. 29 - 30 தேதிகளில் வங்க கடல் பகுதிகளில் 70 முதல் 80 கி.மீ வேகத்திலும், இடையிடையே 90 கி.மீ வேகத்திலும் வீசும். தொடர்ந்து. வரும் 1-ஆம் தேதி முதல் மழை பாதிப்பு படிப்படியாக குறையும் எனவும் தெரிவித்துள்ளார்.

மழை அறிவிப்பு
மழை அறிவிப்புpt web

தொடர்ந்துப் பேசிய அவர், “தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக இருந்தது. குறிப்பாக கடலோர தமிழ்நாட்டில் மிகத் தீவிரமாகவும் இருந்தது. தமிழ்நாட்டில் அநேக இடங்களில் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்துள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை இன்றும் நாளையும் கன முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோடியகரையில் 25 செமீ, வேதாரண்யத்தில் 19 செமீ, வேளாங்கண்ணியில் 13 செமீ, திருப்பூண்டி மற்றும் நாகப்பட்டினம் ஆகிய பகுதிகளில் 12 செமீ மழை பதிவாகியுள்ளது. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி முதல் இயல்பைவிட 3 சதவீதம் அதிகமாக பதிவாகி உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

டிட்வா புயல்
Cyclone Ditwah : சென்னைக்கு தெற்கே 290 கிலோ மீட்டர்.. 2 மாவட்டங்களுக்கு Red Alert

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com