தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் நடத்தும் 2017 ஆம் ஆண்டுக்கான காவல் பணி, சிறைத்துறை பணி, தீயணைப்பு பணிகளுக்கான ஹால் டிக்கெட்கள் தயாராக உள்ளன. தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் www.tnusrbonline.org என்ற இணையதளத்தில் தங்களுடைய ஹால் டிக்கெட்களை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தமிழ்நாடு சிறப்பு காவல்படை இரண்டாம் நிலை காவலர் பணிக்கு 4569 இடங்களும், ஆயுதப்படை இரண்டாம் நிலை காவல்படைக்கு 8568 இடங்களும், இரண்டாம் நிலை சிறைக் காவலர் பணிக்கு 1015 இடங்களும், தீயணைப்பு வீரர் பணிக்கு 1512 இடங்களும் காலியாக உள்ளன. இவற்றுக்கான எழுத்துத் தேர்வு 21.05.2017 ஆம் தேதி நடைபெறுகிறது.