\
தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மருத்துவமனையில் அனுமதி

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மருத்துவமனையில் அனுமதி

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மருத்துவமனையில் அனுமதி
Published on: 

தமிழக முன்னாள் முதலமைச்சரும், இன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி, சென்னையில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக இன்று காலை அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதற்குமுன் இதே மருத்துவமனையில் குடல் இறக்கத்திற்கான அறுவை சிகிச்சை செய்துகொண்ட பழனிசாமி, இன்று காலை 6.30 மணி அளவில், மீண்டும் மருத்துவமனைக்கு வந்தார். இன்று அங்கு அவருக்கு எண்டோஸ்கோபி சிகிச்சை செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.