இரண்டு கட்சி ஆட்சியிலும் மாற்றப்படாத ஒரே ஐ.ஏ.எஸ். : யார் இந்த சண்முகம் ஐ.ஏ.எஸ் ?

இரண்டு கட்சி ஆட்சியிலும் மாற்றப்படாத ஒரே ஐ.ஏ.எஸ். : யார் இந்த சண்முகம் ஐ.ஏ.எஸ் ?

இரண்டு கட்சி ஆட்சியிலும் மாற்றப்படாத ஒரே ஐ.ஏ.எஸ். : யார் இந்த சண்முகம் ஐ.ஏ.எஸ் ?
Published on

தமிழகத்தின் அடுத்த தலைமைச் செயலாளராக நிதித்துறை செயலாளர் சண்முகம் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சண்முகம் ஐ.ஏ.எஸ். குறித்த பின்னணி விவரங்களை தற்போது பார்க்கலாம்.

மூத்த ஐஏஸ் அதிகாரியும், நிதித்துறை செயலாளருமான சண்முகத்தின் சொந்த மாவட்டம் சேலம். வேளாண் துறையில் முதுகலை பட்டம் பெற்ற அவர், கடந்த 1985-ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியானவர். கடந்த 1985-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் அரசு பணியில் சேர்ந்த சண்முகம், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் முதன்மை செயலாளராகவும் பொறுப்பு வகித்த அனுபவம் பெற்றவர். சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.

முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா மற்றும் கருணாநிதி ஆட்சி காலங்களில், கொண்டுவரப்பட்ட வண்ண தொலைக்காட்சி திட்டம், அம்மா உணவகம் உள்ளிட்ட பல திட்டங்களுக்கு நிதி ஒதுக்கி, அரசின் நிதி நிலைமை திறம்பட கையாண்டது இவரின் தனிச்சிறப்பாக பேசப்படுகிறது. அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டிருந்த காலங்களில், தமது திறமையான செயல்பாடுகளால் நிதிச்சுமையை பெருமளவு குறைத்தவர்.

கடந்த 2010-ம் ஆண்டுமுதல் தமிழக அரசின் நிதித்துறை செயலாளராக தொடர்ந்து 9 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். திமுக மற்றும் அதிமுக ஆட்சி காலங்களில் ஒரே துறையின் செயலாளராக தொடர்ந்து பொறுப்பு வகித்த ஒரே நபர் ஐஏஎஸ் அதிகாரி சண்முகம் மட்டுமே.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com