\
Tamil Nadu Must Boost Revenue, Not Just Cut Debt: Siddiq
நிதித்துறை செயலாளர் சித்திக்Pt web

”50 ஆண்டுகள் ஆனாலும் கடனை குறைக்க முடியாது” - தமிழக நிதித்துறை செயலாளர் அதிர்சித் தகவல்!!

கடந்த 3 மாதங்களில் 21,000 கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளோம்; இன்னும் 50 ஆண்டுகள் ஆனாலும் கடனை குறைக்க முடியாது; அதேவேளையில் கடனை விட வருவாயை பெருக்க வேண்டும் என தமிழ்நாடு நிதித்துறை செயலாளர் சித்திக் தெரிவித்துள்ளார்.
Published on

தமிழ்நாட்டின் 2026-27ஆம் நிதியாண்டுக்கான முதல் பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் மரிய வில்சன், இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசின் முதல் முழுமையான பட்ஜெட் இதுவாகும். இந்த பட்ஜெட் உரையின் போது, நடப்பு ஆண்டில் 1 லட்சத்து 73 ஆயிரத்து 445 கோடி ரூபாய் கடனை வாங்க திட்டமிட்டுள்ளாக தெரிவிக்கப்பட்டிருந்தது. முன்னதாக, 10 லட்சம் கோடிக்கு மேல் கடன் வாங்கியிருப்பதாக திமுக அரசை விமர்சித்து தற்போது ஆட்சிக்கு வந்திருக்கும் தவெக, நடப்பு ஆண்டில் மட்டும் 1.73 கோடிக்கு மேல் கடன் வாங்கவிருப்பதாக தெரிவித்திருந்தது பல்வேறு தரப்புகளில் இருந்து கேள்விகளை எழுப்பியது.

நிதித்துறை செயலாளர் சித்திக்
நிதித்துறை செயலாளர் சித்திக்Pt web

இந்தசூழலில் தான், இன்னும் 50 ஆண்டுகள் ஆனாலும் கடனை குறைக்க முடியாது என தமிழ்நாடு நிதித்துறை செயலாளர் சித்திக் தெரிவித்துள்ளார். பட்ஜெட் உரைக்குப் பிறகு தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், ”தமிழகத்தில் தற்பொழுது இருக்கும் நிதிப் பிரச்னையை ஒரே ஆண்டில் சரி செய்ய முடியாது; குறைந்தது இரண்டு ஆண்டுகள் தேவைப்படும். மத்திய அரசிடம் இருந்தும் வர வேண்டிய நிலுவை தொகை 7,000 கோடியாக உள்ளது. கடன் ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து கொண்டுதான் இருக்கும். வரும் 50 ஆண்டுகளுக்கு கடன் வாங்குவதை தவிர்க்க முடியாது.

நமது வருவாய் எவ்வளவு இருக்கிறது என்பதை பார்த்துதான் கடன் வாங்க முடியும். வருவாயை உயர்த்துவதன் மூலமாகவே கடன் சுமையை தவிர்க்க முடியும். தற்போதைய தமிழ்நாடு அரசு செயல்பாட்டில் உள்ள எந்த நல திட்டங்களையும் தடுக்கவில்லை. வளர்ச்சித் திட்டங்களை அதிகப்படுத்த வேண்டுமென தொடர்ந்து தெரிவிக்கப்பட்டு வந்தாலும், நல திட்டங்களை உடனடியாக செயல்படுத்த முடியாது. அதற்கு சில காலம் தேவைப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

Tamil Nadu Must Boost Revenue, Not Just Cut Debt: Siddiq
”வெற்றி எனும் பெயரைக் கொண்ட வெற்று அறிக்கை” - சீமான் விமர்சனம்
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com