தமிழ்நாடு
தமிழகத்தில் மே 31 வரை பொது முடக்கம் நீட்டிப்பு : முதலமைச்சர் அறிவிப்பு
தமிழகத்தில் மே 31 வரை பொது முடக்கம் நீட்டிப்பு : முதலமைச்சர் அறிவிப்பு
தமிழகத்தில் மே 31ஆம் தேதி வரை பொது முடக்கத்தை நீட்டித்து முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இந்தியா முழுவதும் கொரோனா பொது முடக்கம் மே 17ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்தும் பொது முடக்கம் இருக்கும் எனப் பிரதமர் மோடி அறிவித்திருந்தார். இந்நிலையில் தமிழகத்தில் மே 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்திருக்கிறார்.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்குத் தளர்வுகள் எதுவும் அளிக்கப்படவில்லை. தனியார், அரசு பேருந்துகளில் அதிகபட்சமாக 20 பேரும், வேன்களில் 7 பேரும் செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில், மின்சார ரயில் ஆகியவற்றுக்குத் தடை தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

