தமிழ்நாடு
மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல்: அமைச்சரவை கூட்டத்தில் முடிவு?
மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல்: அமைச்சரவை கூட்டத்தில் முடிவு?
மேயர் பதவிக்கான தேர்தலை மறைமுகமாக நடத்துவதற்கு அவசரச் சட்டம் கொண்டுவர தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. இதில், மாநகர மேயர், நகராட்சி தலைவர் ஆகிய பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்துவது தொடர்பாக அவசரச் சட்டம் கொண்டுவர ஒப்புதல் அளிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.