குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதில் பின்தங்கிய தமிழகம்: ஆய்வுத் தகவல்

குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதில் பின்தங்கிய தமிழகம்: ஆய்வுத் தகவல்

குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதில் பின்தங்கிய தமிழகம்: ஆய்வுத் தகவல்
Published on

குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதில் தமிழகம் பின்தங்கியுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பது தொடர்பான கருத்தரங்கில் இதுதொடர்பான ஆய்வு தகவல் வெளியிடப்பட்டது. அதில் பிறந்து ஒரு மணி நேரத்திற்குள் 54.7 சதவீத குழந்தைகளுக்கே தாய்ப்பால் கொடுக்கப்படுவதும், 6 மாத காலத்திற்கு 48.3 சதவீத குழந்தைகளுக்கே தாய்ப்பால் புகட்டுவதும் தெரியவந்துள்ளது. அத்துடன் 6 முதல் 8 மாதக் குழந்தைகளுக்கு திட மற்றும் திரவ நிலையிலான உணவுகளுடன் தாய்ப்பால் கொடுக்கப்படுவதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

அதேசமயம், உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்த 15 சதவீதத்தை விட தமிழகத்தில் அதிக அளவு சிசேரியன் முறை குழந்தைப் பேறு நடைபெறுவது தெரியவந்துள்ளது. பிற மாநிலங்களை விட தமிழகத்தில் அதிகமாக 34 சதவீதம் குழந்தைப் பேறு சிசேரியன் முறையில் நடைபெறுவது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com