வானில் வர்ணஜாலம் காட்டிய பட்டங்கள் - பரவசத்தோடு கண்டுரசித்த பொதுமக்கள்

வானில் வர்ணஜாலம் காட்டிய பட்டங்கள் - பரவசத்தோடு கண்டுரசித்த பொதுமக்கள்
வானில் வர்ணஜாலம் காட்டிய பட்டங்கள் - பரவசத்தோடு கண்டுரசித்த பொதுமக்கள்

மாமல்லபுரம் கடற்கரையோரம் மூன்று நாட்களாக பட்டம் விடும் திருவிழா நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே பட்டம் விடும் திருவிழா கோலாகலமாக துவங்கி கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வந்தது. இந்த பட்டம் விடும் திருவிழாவில் கிறிஸ்மஸ் தாத்தா, டிராகன், டால்பின் தேசியக்கொடி உள்ளிட்ட வடிவிலான காற்றாடிகள் வானில் பறந்து வர்ணஜாலம் காட்டின.

தமிழகத்தில் முதல்முறையாக நடைபெற்ற இந்த காற்றாடி திருவிழாவை வெளிநாட்டவரும் வெளி மாநிலத்தவரும் கண்டுகளித்தனர். இறுதி நாளான நேற்று இந்த பட்டம் விடும் திருவிழாவை காண ஏராளமான மக்கள் தங்களது குழந்தைகளுடன் வந்திருந்து கண்டு ரசித்தனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com