"தமிழகம் பாதுகாப்பான கைகளில் இல்லை! வாரிசு அரசியல் முடிவுக்கு வர வேண்டும்" - ஜே.பி.நட்டா

"தமிழகம் பாதுகாப்பான கைகளில் இல்லை! வாரிசு அரசியல் முடிவுக்கு வர வேண்டும்" - ஜே.பி.நட்டா
"தமிழகம் பாதுகாப்பான கைகளில் இல்லை! வாரிசு அரசியல் முடிவுக்கு வர வேண்டும்" - ஜே.பி.நட்டா

பாஜகவிற்கு நாடும், மக்களும் தான் முதன்மை என்றும், தமிழகத்தில் வாரிசு அரசியலை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று பேசியுள்ளார் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா.

பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா கோவை வந்துசேர்ந்தார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கோவை மற்றும் நீலகிரி நாடாளுமன்ற தொகுதிகளின் தேர்தல் வியூகமாகவும் ஜே.பி.நட்டாவின் வருகை பார்க்கப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தல் 2024-ல் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான ஆயத்த பணியாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, பல்வேறு மாநிலங்களுக்கு சென்று கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். அந்த வரிசையில் தமிழக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவதற்காக நட்டா இன்று கோவை வந்தார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள கலந்து கொண்டுள்ளனர். 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடக்கவுள்ள நிலையில், தமிழகத்தில் பாஜக கட்சியை வலுப்படுத்தும் முயற்சியில் அக்கட்சி ஈடுபட்டு வருகிறது. அதற்கேற்ப, நாடாளுமன்ற தேர்தலில் அதிக தொகுதிகளில் வெற்றி பெறுவது குறித்து ஆலோசனை நடத்த ஜே.பி. நட்டாவின் இந்த வருகை பார்க்கப்படுகிறது.

கோவை, நீலகிரி நாடாளுமன்ற தொகுதியை குறிவைத்து இன்று மேட்டுபாளையத்தில் நடக்கும் பாஜக முகவர்கள் கூட்டத்தில் ஆலோசனைகளை வழங்கினார் ஜேபி நட்டா. மற்றும் பாஜக பொது கூட்ட மேடையில் முன்னாள் திமுக பிரமுகரும் ஜடையம்பாளையம் ஊராட்சி தலைவருமான ஆர்.கே.பழனிச்சாமி பா.ஜ.க வில் இணைந்தார். அவருக்கு பா.ஜ.க தேசிய தலைவர் நட்டா மற்றும் மாநில தலைவர் அண்ணாமலை அகியோர் சால்வை அணிவித்து வரவேற்றனர்.

இந்நிலையில், வேஷ்டி சட்டையோடு மேடைக்கு வந்து பேசினார் ஜேபி நட்டா.

அவர் பேசுகையில், ”மிக பழமையான மொழியையும், கலாச்சாரமும் கொண்டுள்ள பூமி தமிழ்நாடு. கூடியிருக்கும் உங்களிடம் உற்சாகம் காணப்படுகிறது, வருகிற நாடாளுமன்ற தேர்தல் மடுமல்ல, சட்டமன்ற தேர்தலிலும் தமிழகத்தில் மாற்றம் நிகழும்.

கொரோனா பாதிப்பு மற்றும் உக்ரைன் போருக்கு பின்னர் இந்தியா எப்படி முன்னேறுகிறது என உலகம் வியந்து பார்க்கிறது. ஏற்றுமதியில் உலகில் இரண்டாவது இடத்தில் உள்ளோம். 80 கோடி மக்கள் கரீப்கல்யாண் திட்டம் மூலம் பயனடைந்து வருகின்றனர். ஆவாஷ் ஜோஜனா, ஆயுஷ்மான் பவன் போன்ற பவேறு திட்டங்கள் மூலம் ஏழைகளின் வாழ்வில் மாற்றத்தை கொண்டுவந்துள்ளோம்.

அனைவருக்குமான வளர்ச்சியாக பிரதமரின் கோஷம் இருக்கிறது. பழங்குடியின மற்றும் பட்டியிலன மக்கள் அதிகம் பேர் ஆளுநர்களாக, மத்திய அமைச்சர்ககாக, குடியரசுத் தலைவராகவும் இருக்கிறார்கள் பெண்கள் வளர்ச்சிக்காக பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மருத்துவக் கல்லூரிகளை அதிகம் பெற்றுள்ள மாநிலமாக தமிழகம் உள்ளது. தமிழகத்தில் 11 மருத்துவக் கல்லூரிகள், ரானுவ தளவாடங்களை உற்பத்தி செய்யும் நிறுவங்கள் என தமிழகத்தில் நடைபெற்று வருகிறது” என்றார்.

திமுக குறித்து பேசிய நட்டா, ”வாரிசு அரசியல், பணம் , கட்டப்பஞ்சாயத்து செய்வதுதான் திமுக. தமிழகம் பாதுகாப்பான கைகளில் இல்லை. குடும்ப நலன் கருதியே திமுக ஆட்சி செய்கிறது. பாஜக விற்கு நாடும், நாட்டு மக்களுமே முதன்மை. தமிழகத்தில் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். பாரத ஒற்றுமை யாத்திரை நடத்தும் ராகுல் காந்தியுடன் இருப்பவர்கள் தனித் தமிழ்நாடு கோஷம் எழுப்புபவர்கள். ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது நரேந்திர மோடி, அதற்கு எதிராக செயல்பட்டது ராகுல்காந்தியின் குடும்பம்.

விவசாயிகளுக்கு 6 ஆயிரம் ரூபாய், மண்வள அட்டை, பயிர் பாதுகாப்பு திட்டம், ஒரு லட்சம் கோடி வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி 220 கோடி எண்ணிக்கையில் கொடுக்கப்பட்டு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்தவர் நரேந்திர மோடி. மேலும் தடுப்பூசியை 100 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து, 46 நாடுகளுக்கு இலவசமாக கொடுத்தோம். மற்றும் ரஷ்யா உக்ரைன் போரில் 40 க்கும் மேற்பட்ட மாணவர்களை மீட்டு இந்தியா கொண்டு வந்தவர் நரேந்திர மோடி” என்று பேசினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com