Tamil Nadu heavy rain updates on next 3 days
கனமழைpt web (file image)

மே 17 வரை கனமழை.. மீனவர்களுக்கும் எச்சரிக்கை.. வானிலை ஆய்வு மையம் தகவல்!

மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Published on

அந்தமான் மற்றும் நிகோபார் தீவு பகுதிகளில், தென்மேற்குப் பருவமழை வருகிற 16ஆம் தேதி தொடங்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், வருகிற 17ஆம் தேதி வரை, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அந்தமான் மற்றும் நிகோபார் தீவு பகுதிகளில், தென்மேற்குப் பருவமழை வருகிற 16ஆம் தேதி தொடங்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், வருகிற 17ஆம் தேதி வரை, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில் வருகிற 19ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 கனமழை
கனமழைமுகநூல்

நீலகிரி மாவட்டத்தில் பலத்த காற்றுடன் இன்று கனமழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் நாளை ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை மற்றும் புறநகரின் ஒரு சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தமான் கடல் பகுதிகள், மத்திய கிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tamil Nadu heavy rain updates on next 3 days
வங்கக்கடலில் வலுப்பெறும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி.. மே 17 வரை கனமழைக்கு வாய்ப்பு!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com