tamilnadu heavy rain school and colleges leave updates
tamilnadu heavy rain school and colleges leave updatespt

கனமழை எச்சரிக்கை| தமிழகத்தில் 11 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை!

கனமழை எச்சரிக்கை காரணமாக தமிழ்நாட்டின் 11 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும், சென்னை, புதுக்கோட்டையில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Published on
Summary

கனமழை எச்சரிக்கை காரணமாக தமிழ்நாட்டின் 11 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும், சென்னை, புதுக்கோட்டையில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, சிவகங்கை, காஞ்சிபுரம் ஆகிய 11 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கனமழை
கனமழைட்விட்டர்

சென்னை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். புதுக்கோட்டையிலும் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com