\

6 மாவட்டங்களில் நாளை மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. நீலகிரி, கோவை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் நாளை கன முதல் மிக கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, நெல்லை, கன்னியாகுமரி, தேனி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது. திண்டுக்கல், மதுரை, திருப்பூர், வேலூர், கள்ளக்குறிச்சியிலும், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், ஈரோட்டிலும் கனமழை பெய்யும் என குறிப்பிடப்பட்டுள்ளது. தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ராமநாதபுரம், திருச்சியிலும், நாமக்கல், கடலூர், கரூர், பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இன்று முதல் வரும் 20ஆம் தேதி வரை மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. நெல்லை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களிலும், விருதுநகர், தேனி, திண்டுக்கல், தென்காசி, மதுரையிலும் கனமழை பெய்யும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
திருச்சி, கரூர், அரியலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தருமபுரி மாவட்டங்களிலும், கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், பெரம்பலூரிலும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வரும் 20ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், நீலகிரி, கோவை மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. திருப்பூர், மதுரை, ஈரோடு, நாமக்கல், திருச்சி மாவட்டங்களிலும், புதுக்கோட்டை, சிவகங்கை, திண்டுக்கல், திருவாரூர், தஞ்சாவூர், கரூர் மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.