45 மெட்ரிக் டன் ஆக்சிஜனை தெலங்கானாவிற்கு அனுப்பியது ஏன்? - தமிழக சுகாதாரத் துறை விளக்கம்

45 மெட்ரிக் டன் ஆக்சிஜனை தெலங்கானாவிற்கு அனுப்பியது ஏன்? - தமிழக சுகாதாரத் துறை விளக்கம்
45 மெட்ரிக் டன் ஆக்சிஜனை தெலங்கானாவிற்கு அனுப்பியது ஏன்? - தமிழக சுகாதாரத் துறை விளக்கம்

தமிழகத்திற்கே ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ள சூழலில், மத்திய அரசின் உத்தரவின் பேரில் சென்னையில் இருந்து 45 மெட்ரிக் டன் ஆக்சிஜன் ஆந்திரா மற்றும் தெலங்கானாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இதனால் மருத்துவ ஆக்சிஜன் தேவை உயர்ந்துள்ள நிலையில், மத்திய அரசு உத்தரவின்படி சென்னை அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூர் ஆலையில் இருந்து 45 மெட்ரிக் டன் ஆக்சிஜன் ஆந்திரா மற்றும் தெலங்கானாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஐனாக்ஸ் ஆலை தான் சென்னையில் உள்ள மருத்துவமனைகளுக்கு தேவையான ஆக்சிஜனை வழங்குகிறது.

சென்னையில் ஏற்கனவே கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருக்கும் போது இங்கிருந்து ஆக்சிஜனை மற்ற மாநிலங்களுக்கு அனுப்பியது ஏன் என்ற கேள்வி எழுகிறது. ஒப்பீட்டளவில் பார்த்தால் கூட தமிழகத்தில் 79 ஆயிரம் பேர் சிகிச்சையில் உள்ளனர், ஆனால் ஆந்திராவிலும் தெலங்கானாவிலும் அந்த எண்ணிக்கை முறைகே 53 ஆயிரம் , 42 ஆயிரம் என்ற அளவில் தான் உள்ளது. இது குறித்து சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணனை தொடர்பு கொண்டு கேட்ட போது, அவசர தேவைகளின் போது இது போல அண்டை மாநிலங்களுக்கு உதவுவது வழக்கம் தான் என்றும் மற்ற மாநிலங்களில் இருந்து ரெம்டெசிவிர் உள்ளிட்ட மருந்துகள் நமக்கு திருப்பி விடப்படுகின்றன என்றும் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com