\
உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடம் - விருதுகள் வழங்கி கவுரவித்த மத்திய அரசு

உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடம் - விருதுகள் வழங்கி கவுரவித்த மத்திய அரசு

உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடம் - விருதுகள் வழங்கி கவுரவித்த மத்திய அரசு
Published on

உடல் உறுப்பு தானத்தில் முதன்மை மாநிலமாக விளங்கும் தமிழகத்திற்கு மத்திய அரசு விருது வழங்கி கவுரவித்துள்ளது.

இந்த விருதை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஹர்சவர்தனிடம் இருந்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பெற்றுக் கொண்டார். டெல்லியில் பத்தாவது இந்திய உடல் உறுப்பு தான தின விழா நடைபெற்றது.

அதில், உடல் உறுப்பு தானத்தில் மிக சிறப்பாக செய்யக்கூடிய சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு விருதும், இரண்டு கைகளை இழந்தவருக்கு, இறந்தவரின் கைகளை பொருத்தி அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் ரமாதேவிக்கு விருதும் என்பன உள்ளிட்ட 3 விருதுகள் தமிழகத்திற்கு கிடைத்தன. தொடர்ந்து ஐந்தாவது முறையாக தமிழகத்திற்கு விருது வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com