Tamil Nadu Ground water Crisis 9 Districts in Red Zone
நிலத்தடி நீர்கூகுள்

தமிழ்நாட்டில் நிலத்தடி நீர் மட்டம் கவலைக்கிடம்.. சிவப்புப் பட்டியலில் 9 மாவட்டங்கள்!

தமிழ்நாட்டில் நிலத்தடி நீர் மட்டம் கவலைக்கிடமான நிலையை எட்டியுள்ளதாக மத்திய நிலத்தடி நீர் வாரியமும் தமிழக நீர் வளத் துறையும் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
Published on

தமிழ்நாட்டில் நிலத்தடி நீர் மட்டம் கவலைக்கிடமான நிலையை எட்டியுள்ளதாக மத்திய நிலத்தடி நீர் வாரியமும் தமிழக நீர் வளத் துறையும் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

தமிழ்நாட்டில் நிலத்தடி நீர் மட்டம் கவலைக்கிடமான நிலையை எட்டியுள்ளதாக மத்திய நிலத்தடி நீர் வாரியமும் தமிழக நீர் வளத் துறையும் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இதுகுறித்துப் பார்க்கலாம். ஆய்வுகளின்படி தமிழ்நாட்டில் நிலத்தடி நீர்மட்டம் கடுமையாகக் குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் மொத்தம் 9 மாவட்டங்கள் அதிகடுமையான சுரண்டல் பிரிவில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. அதாவது, மழை மூலம் பூமிக்குள் செல்லும் நீரைவிட, எடுக்கப்படும் நீரின் அளவு மிக அதிகம். சேலம், திருப்பத்தூர், வேலூர், சென்னை, திண்டுக்கல், மயிலாடுதுறை, நாமக்கல், கரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் இந்த சிவப்புப் பட்டியலில் உள்ளன. 2025ஆம் ஆண்டு கணக்கீட்டின்படி, தமிழ்நாட்டின் ஆண்டு நிலத்தடி நீர் மறுஊட்டம் 22.61 பிசிஎம் ஆக (BCM) உள்ளது. ஆனால், இதில் கணிசமான அளவு ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வருகிறது.

Tamil Nadu Ground water Crisis 9 Districts in Red Zone
நிலத்தடி நீர்எக்ஸ் தளம்

கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்கள் 90 சதவீதம் முதல் 100 சதவீதம்வரை நிலத்தடி நீரை உறிஞ்சி மிக நெருக்கடியான நிலையில் உள்ளன. தருமபுரி, மதுரை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்கள் 70 சதவீதம் முதல் 90 சதவீதம்வரை நீரைப் பயன்படுத்தி பாதி-நெருக்கடி நிலையில் உள்ளன. நிலத்தடி நீர் சுரண்டலைத் தடுக்க முறையான சட்டக் கட்டமைப்பு இல்லாததே இந்த நிலைக்குக் காரணம் என நிபுணர்கள் கூறுகின்றனர். தற்போது இதற்காக ‘தமிழ்நாடு நிலத்தடி நீர் மேலாண்மை மசோதா - 2026' கொண்டு வரப்பட்டுள்ளது, இது ஆளுநரின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறது.

Tamil Nadu Ground water Crisis 9 Districts in Red Zone
நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதால் பூமியின் அச்சு சாய்வு: ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com