மது விற்பனையால் தமிழக அரசுக்கு கிடைக்கும் வருவாய் எவ்வளவு ?

மது விற்பனையால் தமிழக அரசுக்கு கிடைக்கும் வருவாய் எவ்வளவு ?

மது விற்பனையால் தமிழக அரசுக்கு கிடைக்கும் வருவாய் எவ்வளவு ?
Published on

சென்னை பெருநகர காவல்துறை எல்லைக்குட்பட்ட இடங்களில் மட்டும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமுடக்கம் காரணமாக தமிழகத்தில் உள்ள மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில் மத்திய அரசு தளர்வுகளை அறிவித்ததால் அண்டை மாநிலங்களான கர்நாடகா, கேரளா மற்றும் ஆந்திராவில் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. இதன் காரணமாக மதுப்பிரியர்கள் பக்கத்து மாநிலங்களுக்கு படையெடுத்ததால் வேறு வழியின்றி டாஸ்மாக் கடைகளை திறப்பதாக தமிழக அரசு அறிவித்தது. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர பிற இடங்களில் மே 7ஆம் தேதி முதல் மதுக்கடைகள் செயல்படும் என்று அரசு கூறியது.

எனினும் டாஸ்மாக் கடைகள் இயங்கும் நேரம் குறைக்கப்படுவதாகவும், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே மது விற்பனை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே தனது முந்தையை அறிவிப்பில் சிறு மாற்றத்தை செய்திருக்கும் தமிழக அரசு சென்னை பெருநகர காவல்துறை எல்லைக்குட்பட்ட இடங்களில் மதுக்கடைகள் திறக்கப்படாது எனக் கூறியுள்ளது. பாதிப்பு அதிகமிருப்பதால் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுக்கடைகள் திறக்கப்படுவதற்கு எதிர்க்கட்கிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. வருவாயை கருத்தில் கொண்டே டாஸ்மாக் கடைகளை தமிழக அரசு திறப்பதாக புகார் எழுந்துள்ளது.

2003-ஆம் ஆண்டு முதல் தமிழக அரசு மதுக்கடைகளை நடத்தி வருகிறது. அந்தாண்டில் மது விற்பனை மூலம் அரசுக்கு கிடைத்த வரி வருவாய் 3 ஆயிரத்து 639 கோடி ரூபாய். ஒவ்வொரு ஆண்டும் 6 முதல் 10 விழுக்காடு அதிகரித்து வந்த டாஸ்மாக் வரி வருவாய் 2015ஆம் ஆண்டில் 20 ஆயிரத்து 10 கோடி ரூபாயாக உயர்ந்தது. 2017 - 18ஆம் நிதியாண்டில் 26 ஆயிரத்து 797 கோடி ரூபாயும், 2018 - 19-ல் 31 ஆயிரத்து 157 கோடி ரூபாயும் டாஸ்மாக் மது விற்பனை மூலம் கிடைத்தது.

2016ஆம் ஆண்டு அதிமுக அளித்த தேர்தல் வாக்குறுதியின்படியும், நீதிமன்ற உத்தரவின்படியும் கடந்த 4 ஆண்டுகளில் ஆயிரத்து 426 மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. தற்போது தமிழகத்தில் 5 ஆயிரத்து 146 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. 2019 - 20ஆம் நிதியாண்டில் தமிழக அரசின் வருவாய் ஒரு லட்சத்து 38 ஆயிரம் கோடி ரூபாய். இதில் டாஸ்மாக் கடை மூலம் 31 ஆயிரத்து 157 கோடி ரூபாய் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com