TN Governmentpt desk
தமிழ்நாடு
வயநாடு நிலச்சரிவு எதிரொலி: தமிழக மலை மாவட்டங்களை கண்காணிக்க அரசு உத்தரவு
வயநாடு நிலச்சரிவு எதிரொலியாக, தமிழகத்தின் மலை கிராமங்களை கண்காணிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
திண்டுக்கல், நீலகிரி, கோவை, குமரி, நெல்லை உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களை கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக மழைக்காலங்களில் வருவாய்த்துறை, பேரிடர் மேலாண்மைத்துறை அதிகாரிகள் தொடர் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
Wayanad LandslidePT
அதேபோல் மாவட்ட நிர்வாகத்துக்கு உடனுக்குடன் தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஏற்கெனவே ஆலோசனை நடத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.