சின்னத்திரை படப்பிடிப்புக்கு 60 பேர் வரை அனுமதி: முதல்வர் உத்தரவு

சின்னத்திரை படப்பிடிப்புக்கு 60 பேர் வரை அனுமதி: முதல்வர் உத்தரவு

சின்னத்திரை படப்பிடிப்புக்கு 60 பேர் வரை அனுமதி: முதல்வர் உத்தரவு
Published on

சின்னத்திரை படப்பிடிப்பிற்கு 60 பேர் வரை பணியாற்றலாம் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மார்ச் மாதத்திலிருந்து நாடும் முழுவதும் பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் அமைப்புசாரா தொழிலாளர்கள் உட்படப் பலர் பாதிக்கப்பட்டனர். அதில் திரைத்துறை சார்ந்த தொழிலாளர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் சின்னத்திரை தொடர்பான படப்பிடிப்புகளை 20 நபர்களை மட்டும் வைத்து நடத்தாலாம் என அமைச்சர் கடம்பூர் ராஜு அண்மையில் தெரிவித்தார்.ஆனால் இதற்கு சின்னத்திரை தயாரிப்பாளர்கள் 20 நபர்களை மட்டும் வைத்துக்கொண்டு படப்பிடிப்புகளை நடத்துவது என்பது சாத்தியமில்லாதது எனத் தெரிவித்தனர்.

இது தொடர்பாக பேசிய பெப்சி அமைப்பின் தலைவர் செல்வமணி, சின்னத்திரை படப்பிடிப்புக்கு 40 பேரை அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இந்நிலையில் சின்னத்திரை படப்பிடிப்பிற்கு 60 பேர் வரை பணியாற்றலாம் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். இதனை அடுத்து மார்ச் மாதத்தில் இருந்து நிறுத்தப்பட்ட சின்னத்திரை படப்பிடிப்புகள் முழு வேகத்துடன் மீண்டும் தொடங்குமென எதிர்பார்க்கப்படுகிறது

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com