"சென்னையில் உள்ள அனைவருக்கும் நிவாரண தொகை வழங்கப்படும்" - தமிழக அரசு அறிவிப்பு!

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மற்ற மூன்று மாவட்டங்களில் கணக்கெடுப்பு நடத்தி உரிய நிவாரண தொகை வழங்கப்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின்
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் file image

தமிழகத்தில் மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த தொடர் கனமழையால் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை ஆகிய மாவட்டங்களில் பல பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் அரசு தீவிரமாக ஈடுபட்டு வந்தது. இதில் பலரும் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குத்  தேவையான அனைத்து உதவிகளையும் அரசு வழங்கி வருகிறது. 

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின்
ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் - கோவிந்தா கோஷமிட்டு பக்தர்கள் வழிபாடு

மழை விட்டு ஒரு வாரத்தை கடந்தும் ஒரு சில இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. அங்கு மழைநீரை அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.

இந்தநிலையில் மிக்ஜாம் புயலால் கடுமையான பாதிக்கப்பட்ட சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரண தொகை வழங்கப்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

குறிப்பாக சென்னையில் அதிகளவில் பாதிப்பு என்பதால் சென்னையில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் நிவாரண தொகை வழங்கப்படும் எனவும், மற்ற மூன்று மாவட்டங்களில் எந்தெந்த பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டதோ, அந்த பகுதிகள் முழுவதும் கணக்கெடுப்பு நடத்தி உரிய நிவாரணம் வழங்கப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com