பட்டேல் எடுத்த முடிவால் தான் இன்று நாம் பாதுகாப்பாக இருக்கிறோம் - ஆளுநர் ஆர்.என்.ரவி

பட்டேல் எடுத்த முடிவால் தான் இன்று நாம் பாதுகாப்பாக இருக்கிறோம் - ஆளுநர் ஆர்.என்.ரவி
பட்டேல் எடுத்த முடிவால் தான் இன்று நாம் பாதுகாப்பாக இருக்கிறோம் - ஆளுநர் ஆர்.என்.ரவி

“சர்தார் வல்லபாய் பட்டேல் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் இன்று நாம் அனைவரும் வெவ்வேறு நாடுகளின் குடிமகன்களாக இருந்திருப்போம்” என படேலுக்கு புகழாரம் சூட்டியுள்ளார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி.

சென்னை மயிலாப்பூரில் உள்ள பாரதிய வித்யா பவனில் சர்தார் வல்லபாய் படேல் அறக்கட்டளை சார்பாக வல்லபாய் பட்டேலின் 147- வது பிறந்தநாள் விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி கலந்து கொண்டு மேடையில் உரையாற்றினார்.

முன்னதாக  சர்தார் வல்லபாய் பட்டேல் அறக்கட்டளை சார்பாக சென்னையில் உள்ள பள்ளிகளில் நடத்தப்பட்ட சிறந்த மொழி புலமை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஆளுநர் ஆர் எம் ரவி பரிசுகளையும் பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினார். தொடர்ந்து பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, “சர்தார் வல்லபாய் பட்டேல் நாட்டின் உயர்ந்த தலைவர்களுள் ஒருவர். அவர் ஒரு தலைசிறந்த மனிதன். சர்தார் வல்லபாய் பட்டேல் அறகட்டளைக்கு எனது நன்றிகள். அவரை மறக்காமல் இன்று வரை நினைவு கூர்ந்து விழா செய்கிறார்கள்.

500 கும் மேற்பட்ட  சமஸ்தானாங்கள் ஒன்றிணைத்து இந்தியாவின் வரைபடத்தை உருவாக்கி இளைஞர்கள் கைகளில் அளித்தார் படேல். இங்கிலாந்து சுதந்திரம் வழங்கிய பிறகும் 560 கும் மேற்பட்ட பிரிவுகளாக நாடு பிரிந்து கிடந்தது. நமது நாட்டின் இந்த வகுப்பு வாத பிரிவினை அரை மில்லியன் மக்களின் உயிரழப்புக்கு வழி வகுத்தது. சுதந்திர இந்தியாவில் பல சமஸ்தானங்கள் இந்தியாவுடன் இருக்கவே விருப்பட்டது. அதன் காரணமாக பட்டேல் பல உறுதியான நடவடிக்கை மேற்கொண்டு, இவை அனைத்தும் ஒன்றாக இந்தியாவுடன் இணைக்க வழிவகை செய்தார்.

அன்று பட்டேல் அவர்களால் எடுக்கப்பட்ட முடிவால்தான் இன்று நாம் பாதுகாப்பாக இருக்க முடிகிறது. அந்த நேரத்தில் அழுத்தங்களுக்கு மத்தியில் இந்த சிறந்த மனிதன் சிறப்பாக செயல்பட்டார். சர்தார் வல்லபாய் படேல் மட்டும் அன்று இல்லாமல் இருந்திருந்தால், இன்று இங்கு அமர்ந்திருக்கும் நாமெல்லாம் பல்வேறு நாட்டின் குடிமகன்கள் ஆக இருந்திருப்போம். இது ஒரு ஆகசிறந்த சாதனை.

அந்த மாநிலங்களை ஆட்சி செய்பவர்கள் தங்களுக்கு யாருடன் வேண்டும் என்றாலும் சேர்ந்து கொள்ளலாம் என்ற அதிகாரம் வழங்கப்பட்டு இருந்தது. அந்த நேரத்தில் ராஜா ஹரிசிங் இந்தியாவுடன் சேர்ந்து கொள்ள ஒப்புப்கொண்டார்.200 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர்களில் ஒருவரையே இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் ஆக நியமித்தது இந்தியா. அந்த அளவிற்கு இந்தியாவிற்கு மிக பெரிய நல் இதயம் படைத்த ஒரு நாடு.

அப்போது பிரதமராக இருந்த நேருவுக்கும் அதிக இஸ்லாமியர்கள் வாழும் காஷ்மீரை இந்தியாவுடன் இணைப்பதற்கு நிறைய அழுத்தங்கள் இருந்தது.ராஜா ஹரிஷிங் அப்போதைய கவர்னர் ஜெனரல் மவுண்ட்பேட்டன் ஒரு கடிதம் எழுதினார். கடிதம் எழுதிவிட்டு தூங்க சென்று விட்டார்.காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க நான் எழுதிய கடிதத்தை இந்தியா ஏற்றுக்கொண்டால் என்னை எழுப்பாதீர்கள் நான் நிம்மதியா உறங்க வேண்டும் என்றும் ஒருவேளை இந்தியா ஏற்றுக்கொள்ள வில்லை என்றால் என்னை சுட்டு கொன்று விடுங்கள் என்று கூறினார் ராஜா ஹரிசிங்.

அந்த நேரத்தில் அதற்குள்ளாக பாகிஸ்தான் காஷ்மீரில் நோக்கி படையை அனுப்ப ஆரம்பித்தது இந்தியாவும் பதிலுக்கு படையை அனுப்ப தயாரானது. பின் இங்கிலாந்து பிரதமர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க பேச்சுவார்த்தைக்கு சென்றோம் பேச்சுவார்த்தைக்கு சென்று வந்த பிறகு பாகிஸ்தானும் இங்கிலாந்தும் நமக்கு எதிராக திரும்பியது.நமக்கு நிறைய கட்டளைகளை போட ஆரம்பித்தார்கள்..அந்த நேரத்தில் நேரு மிகவும் கசபாக உணர்ந்தார் அதை அவர் பதிவும் செய்துள்ளார் என குறிப்பிட்டார்.அந்த நேரத்தில் காஷ்மீர் பாகிஸ்தானுடன் இணைய வேண்டும் என்பதில்  இங்கிலாந்தும் அமெரிக்காவும் உறுதியாக  இருந்ததாக குறிப்பிட்டார்.

அந்த ஒரு விசயத்தை (காஷ்மீர்) தவிர சர்தார் வல்லபாய் படேல் சிறப்பாக செயல்பட்டார்.சீனா திபெத் பகுதியை கைப்பற்ற முற்பட்ட போது ஒரு நீளமான கடிதத்தை எழுதினார் வல்லபாய் படேல்.இது இந்தியாவின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் என எச்சரித்தார்.அவர் அது குறித்து பேச ஒரு கூட்டத்தையும் ஏற்பாடு செய்திருந்தார். ஆனால் துருதஸ்டவசமாக அந்த கூட்டம் நடைபெறவில்லை, அதற்குள்ளாக  சர்தார் வல்லபாய் படேல் இறந்து விட்டார்.

அதன் பின் 3000 சதுர கிலோ மீட்டர் அளவு கொண்ட திபெத் பகுதியை சீனா எடுத்து கொண்டது. நாம் இப்படிபட்ட ஒரு சிறந்த மனிதரை கட்டாயமாக நினைவில் கொள்ளவேண்டும்.அவரது பங்களிப்பையும் மறக்க கூடாது.நாம் தற்பொழுது செய்வதை விட இன்னும் அதிகமாக செய்ய வேண்டும். அவருக்கு நாம் நன்றி கடன் பட்டுள்ளோம். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com