தமிழ்நாடு
சமஸ்கிருத மொழி பல மதங்களுக்கும் தாய் வீடு: ஆளுநர் பேச்சு
சமஸ்கிருத மொழி பல மதங்களுக்கும் தாய் வீடு: ஆளுநர் பேச்சு
சமஸ்கிருத மொழி என்பது பல மதங்களுக்கும், இலக்கியத்திற்கும் தாய் வீடாக உள்ளது என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.
பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜாவின் தந்தை மறைந்த பேராசிரியர் ஹரிஹரன் எழுதிய தமிழ்-சமஸ்கிருதம் அகராதி வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. விழாவில் சிறப்பு அழைப்பாளராக ஆளுநர் பன்வாரிலால் கலந்து கொண்டு நூலை வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் பேசிய பன்வாரிலால், சமஸ்கிருத மொழி என்பது பல மதங்களுக்கும், இலக்கியத்திற்கும் தாய் வீடாக உள்ளது என்று கூறினார். மேலும், ஒவ்வொருவரும் தங்களது தாய் மொழியில் புலமை பெற வேண்டியது அவசியம் என ஆளுநர் தெரிவித்தார். அறிவியல் சார்ந்த அரிய பொக்கிஷ தகவல்கள் சமஸ்கிருதத்தில் புதைந்துள்ளதாகவும், அதனைக் கண்டறிந்து பயன்படுத்த வேண்டிய கடமை உள்ளதாகவும் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்தார்.

