“2 அல்லது 6 மாதத்தில் தமிழக ஆட்சி மாறும்” - உதயநிதி ஸ்டாலின்

“2 அல்லது 6 மாதத்தில் தமிழக ஆட்சி மாறும்” - உதயநிதி ஸ்டாலின்

“2 அல்லது 6 மாதத்தில் தமிழக ஆட்சி மாறும்” - உதயநிதி ஸ்டாலின்
Published on

தமிழகத்தில் 2 அல்லது 6 மாதத்தில் ஆட்சி மாற்றம் வரும் என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

வேலூர் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கதிர் ஆனந்திற்கு ஆதரவாக உதயநிதி ஸ்டாலின் பரப்புரை செய்தார். வாணியம்பாடி காமராஜ்புரம், அளிஞ்சிகுளம், கௌக்கம்பட்டு, சங்கராபுரம், கோணமேடு, கொடையாஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் நடந்து சென்று மக்களை சந்தித்து அவர் வாக்குகளை சேகரித்தார். 

அப்போது பேசிய அவர், “இன்னும் 2 அல்லது 6 மாதத்தில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும். ஆட்சி மாறும். விரைவில் ஸ்டாலின் முதல்வர் ஆவார். இந்தியா முழுக்க வெற்றிபெற முடிந்த மோடியாலும், எடப்பாடியாலும் தமிழகத்தில் வெற்றிபெற முடியவில்லை. மக்கள் அவர்களை விரட்டி அடித்தார்கள். வேலூரில் திமுக வெற்றி 100% உறுதி செய்யப்பட்ட ஒன்று. எதிர்கட்சி வேட்பாளரை டெபாசிட் இழக்கச்செய்ய வேண்டும்” என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com