\
நியாயவிலை கடையில் மக்களை அலைக்கழித்தால் நடவடிக்கை: அதிகாரிகளுக்கு தமிழக அரசு எச்சரிக்கை

நியாயவிலை கடையில் மக்களை அலைக்கழித்தால் நடவடிக்கை: அதிகாரிகளுக்கு தமிழக அரசு எச்சரிக்கை

நியாயவிலை கடையில் மக்களை அலைக்கழித்தால் நடவடிக்கை: அதிகாரிகளுக்கு தமிழக அரசு எச்சரிக்கை
Published on

நியாயவிலை கடையில் ரேஷன் பொருட்களை வாங்கவரும் குடும்ப அட்டைதாரரை அலைக்கழிக்கும் ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை தெரிவித்துள்ளது.

வயதானவர்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்க அதிகாரிகள் மறுப்பதாக வந்த புகாரையடுத்து, உணவுப்பொருள் வழங்கல்துறை சார்பில் இந்த எச்சரிக்கையானது சுற்றறிக்கை வழியாக தரப்பட்டுள்ளது. முன்னதாக நியாயவிலை கடைக்கு செல்ல முடியாத நிலையிலுள்ள வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள், இதர நபர்கள் தங்களின் ஒப்புதல் கடிதத்தை கொடுத்து வேறொரு நபர் மூலம் பொருட்களை வாங்கும் வழிமுறை தொடர்பான அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com