வெள்ளத்தில் சிக்கிய தெலங்கானா : தமிழகம் ரூ.10 கோடி நிதியுதவி

வெள்ளத்தில் சிக்கிய தெலங்கானா : தமிழகம் ரூ.10 கோடி நிதியுதவி

வெள்ளத்தில் சிக்கிய தெலங்கானா : தமிழகம் ரூ.10 கோடி நிதியுதவி
Published on

கடும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தெலங்கானாவுக்கு வெள்ள நிவாரணப் பணிகளுக்காக தமிழ்நாடு சார்பாக ரூ.10 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது.

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். அதில், இதுவரை இல்லாத கனமழை மற்றும் வெள்ளத்தால் ஹைதராபாத் மற்றும் பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார். இந்த இக்கட்டான நேரத்தில் தெலங்கானா அரசு மற்றும் மக்களுடன் தமிழக மக்கள் துணை நிற்பதாக கூறியுள்ளார்.

அத்துடன் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் தெலங்கானா மாநிலத்திற்கு தமிழ்நாடு கொடுக்கும் ஆதரவுக்கு அடையாளமாக ரூ.10 கோடியை வெள்ள நிவாரணமாக வழங்குவதாக குறிப்பிட்டுள்ளார். தெலங்கானா முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்க இந்த தொகையை வழங்க உத்தரவிட்டுள்ளதாக தமிழக முதல்வர் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, தெலங்கானாவுக்கு உதவிய தமிழகத்துக்கு அம்மாநில ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் நன்றி தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com