ஆசிரியர் பணிக்கு இந்துக்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியுமா? - அரசுக்கு சீமான் கண்டனம்

ஆசிரியர் பணிக்கு இந்துக்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியுமா? - அரசுக்கு சீமான் கண்டனம்
ஆசிரியர் பணிக்கு இந்துக்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியுமா? - அரசுக்கு சீமான் கண்டனம்

தமிழ்நாடு அரசு கலைக்கல்லூரியின் ஆசிரியர் பணிக்கு இந்துக்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியுமெனும் அரசின் உத்தரவை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்  என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக சீமான் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “கொளத்தூர் தொகுதியில் அண்மையில் இந்து சமய அறநிலையத்துறையால் தொடங்கப்பட்ட கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆசிரியர் மற்றும் பல்வேறு பணிகளுக்காக நடைபெறவிருக்கும் நேர்முகத்தேர்விற்கு இந்துக்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு அதிர்ச்சியளிக்கிறது. அரசுக்குச் சொந்தமான கலைக்கல்லூரியில் ஒரு குறிப்பிட்ட மதத்தினர் மட்டுமே விண்ணப்பிக்க முடியுமென மதத்தீண்டாமையோடு கொடுக்கப்பட்டுள்ள திமுக அரசின் அறிவிப்பு கடும் கண்டனத்திற்குரியது.

தனியார் பள்ளிகள், கல்லூரிகள் மட்டுமன்றி, தமிழ்நாட்டில் மதம் சார்ந்த அமைப்புகளால் நிருவகிக்கப்படும் கல்வி நிறுவனங்களிலும்கூட, மாற்று மதங்களைச் சேர்ந்தவர்கள் பல்லாயிரக்கணக்கில் பணிபுரிந்துவரும் வேளையில், அரசு சார்பில் தொடங்கப்பட்ட கல்லூரியில் ஒரு குறிப்பிட்ட மதத்தினர் மட்டுமே பணிபுரிய வாய்ப்பளித்து, மற்ற மதத்தினர் பணிபுரியத் தடைவிதிப்பது திமுக அரசின் மதச்சார்பின்மை முகமூடியைத் தோலுரிக்கிறது” என தெரிவித்திருக்கிறார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com