பெண்களின் பாதுகாப்புக்காக அறிமுகமாகிறது தமிழக அரசின் பிங்க் ஆட்டோ திட்டம்!
சென்னையில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அடுத்த மாதம் முதல் பிங்க் ஆட்டோ திட்டம்...
பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்யவும், பெண்களுக்கான சுயதொழில் வேலை வாய்ப்பினை உருவாக்கவும் தமிழக அரசு, ரூ. 2 கோடி செலவில் 200 பிங்க் ஆட்டோ இயக்கும் திட்டம் செயல்படுத்த உள்ளது.
இத்தகைய ஆட்டோ பிங்க் நிறத்தில் இருக்கும் என்றும் பெண்கள் மட்டும்தான் ஓட்டுநராக இருப்பார்கள் என்றும் அவர்கள் பிங்க் நிறத்தில் சீருடை அணிந்திருப்பார்கள் என்றும், மேலும் இந்த ஆட்டோவில் ஜிபிஎஸ் மற்றும் வாகனம் இருக்கும் இடத்தைக் கண்டறியும் சாதனம் உள்ளிட்டவை இருக்க வேண்டும் என மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
பிங்க் ஆட்டோ திட்டம் அடுத்த மாத முதல் சென்னையில் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிங்க் ஆட்டோ திட்டம் தொடர்பாக பொதுமக்கள் 15 நாட்களில் கருத்து தெரிவிக்கலாம் எனவும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.