கலைஞர் மகளிர் உரிமைத்தொகை: அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு!

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தொடர்பாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இல்லத்தரசிகளுக்கு 1,000 ரூபாய் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் குடும்பத் தலைவிகளுக்கு 1,000 ரூபாய் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இப்போது அது தொடர்பான அரசாணையை தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்டுள்ளது.

Attachment
PDF
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Preview

ரேஷன் கடைகளில் விண்ணப்பங்களை பெற வேண்டுமென்றும் ஆவணங்கள் இல்லாவிட்டாலும் பயனாளர்களுக்கு இந்த உதவித் தொகை கிடைப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டுமென்றும் அண்மையில் முதலமைச்சர் அறிவுறுத்தி இருந்தார். இந்நிலையில் அரசாணை வெளியாகி இருக்கிறது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com