"சேவைக்கட்டணம் என மகளிர் உரிமைத்தொகையில் பிடித்தம் செய்யாதீர்" -வங்கிகளுக்கு தமிழக அரசு அறிவுறுத்தல்

கட்டணம் என்ற பெயரில் மகளிர் உரிமை தொகையில் வங்கிகள் பிடித்தம் செய்ய வேண்டாம் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் தமிழக அரசு வழங்கிவரும் மகளிர் உரிமை தொகையில் வங்கிகள் கட்டண பிடித்தம் செய்வதாக புகார் எழுந்தது. இந்நிலையில் இது தொடர்பாக தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “உரிமை தொகையை பிடித்தம் செய்யக்கூடாது. சில வங்கிகள் இதனை பின்பற்றவில்லை என்பது ஏற்கத்தக்கதல்ல. ஒப்பந்தங்களை மீறும் வங்கிகளின் பரிவர்த்தனைகள் வேறு வங்கிகளுக்கு மாற்றப்பட்டு மேல் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறியுள்ளார்.

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
கலைஞர் மகளிர் உரிமைத்தொகைபுதிய தலைமுறை

மேலும் “மகளிர் உரிமை தொகையை வங்கிகள் உங்களது நிர்வாக காரணங்களுக்காக பிடித்தம் செய்யக்கூடாது என்பது குறித்து மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதப்படும். உரிமை தொகை பிடித்தம் செய்யப்பட்டிருந்தால், முதல்வரின் முகவரி உதவி மைய தொலைபேசி எண் 1100 ஐ அழைத்து புகார் அளிக்கலாம். இந்த புகார்கள் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com