முதன்மை செயலாளராக இருந்த உதயச்சந்திரன் மாற்றம் - ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்; முழுதகவல்

முதலமைச்சரின் முதன்மை செயலாளராக முருகானந்தம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
IAS officers
IAS officers PT desk

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். முதன்மை செயலாளராக இருந்த உதயச்சந்திரன் நிதித்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக முருகானந்தம் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேபோல், உள்துறை செயலாளராக அமுதாவை நியமித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை செயலாளராக ககன்தீப் சிங் பேடியும், சென்னை மாநகராட்சி ஆணையராக ராதாகிருஷ்ணனும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

ஊரக வளர்ச்சித்துறை செயலாளராக செந்தில்குமாரை நியமித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை செயலாளராக சந்திரமோகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளராக ஜெகன்நாதன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை ஆணையராக மைதிலி ராஜேந்திரன் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.

மனிதவள மேம்பாட்டுத்துறை செயலாளராக நந்தகுமாரும், பொருளாதார மற்றும் புள்ளியியல் துறை இயக்குநராக கணேஷும் நியமிக்கப்பட்டுள்ளனர். பாலச்சந்திரன், ஐஏஎஸ் ஓய்வு பெறுகிறார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com