விவேக்கின் உடலை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய தமிழக அரசு அனுமதி கேட்பு!

விவேக்கின் உடலை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய தமிழக அரசு அனுமதி கேட்பு!

விவேக்கின் உடலை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய தமிழக அரசு அனுமதி கேட்பு!
Published on

மறைந்த நடிகர் விவேக்கின் உடலை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்வதற்கு தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கேட்டுள்ளது தமிழக அரசு. 

தமிழ்த் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகராக விளங்கிய விவேக், மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அதிகாலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து அவரின் உடல் சாலிகிராமத்திலுள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அங்கு நண்பர்கள், திரைத்துறை பிரபலங்கள்,  நடிகர், நடிகைகள்,  பொதுமக்கள் என அனைவரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். விவேக்கின் உடல் இன்று மாலை விருகம்பாக்கம் மின் தகன மேடையில் தகனம் செய்யப்படுகிறது என குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் விவேக்கிற்கு அரசு சார்பில் காவல்துறை மரியாதை அளிக்க தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கேட்டுள்ளது தமிழக அரசு. சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதி அவசியம் ஆகும்.   

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com