\
தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு நிறுத்தம்

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு நிறுத்தம்

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு நிறுத்தம்
Published on

அரசு ஊழியர்களுக்கு அடுத்த ஆண்டு ஜூலை மாதம் வரை அகவிலைப்படி உயர்வை நிறுத்தி வைப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஏற்கெனவே மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனிடையே தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஓராண்டுக்கு ஈட்டிய விடுப்பு ஊதியம் கிடையாது என தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருந்தது.

ஆண்டுக்கு 15 நாள், 2 ஆண்டுகளுக்கு 30 நாள் ஈட்டிய விடுப்பு ஊதியம் வழங்கப்படுவது வழக்கம். அந்த ஊதியம் கிடையாது என அரசாணை வெளியிட்டதை தொடர்ந்து தற்போது அகவிலைப்படி உயர்வும் 2021 ஜூலை மாதம் வரை நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com