\
கடற்கரை, சாலைகளில் புத்தாண்டு கொண்டாட அனுமதியில்லை- தமிழக அரசு

கடற்கரை, சாலைகளில் புத்தாண்டு கொண்டாட அனுமதியில்லை- தமிழக அரசு

கடற்கரை, சாலைகளில் புத்தாண்டு கொண்டாட அனுமதியில்லை- தமிழக அரசு
Published on: 

கடற்கரை, சாலைகளில் புத்தாண்டு கொண்டாட அனுமதியில்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கானது, சூழ்நிலைகளுக்கு ஏற்ப தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. அதன்படி அண்மையில் சுற்றுலா தலங்கள் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளுடன் இயங்கலாம் என அரசு அறிவித்தது.

இந்நிலையில் 2021-ஆம் ஆண்டு புத்தாண்டை கடற்கரை, சாலைகளில் கொண்டாட அனுமதியில்லை எனவும் அந்த நாட்களில் ( டிசம்பர் 31 நள்ளிரவு மற்றும் ஜனவரி 1 )  மக்கள் கடற்கரை மற்றும் அதனை ஒட்டிய சாலைகளுக்கு செல்ல வேண்டாம் எனவும் தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. இந்தக் கட்டுப்பாடுகள் உணவகங்கள், தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகளுக்கும் பொருந்தும் எனவும் தெரிவித்துள்ளது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com