பொங்கல் பரிசு|அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5000 வழங்க தமிழக அரசு பரிசீலினை?
வரும் பொங்கல் பண்டிகைக்கு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் தலா ஐந்தாயிரம் ரூபாய் வழங்க தமிழக அரசு பரிசீலினை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது..
வரும் பொங்கல் பண்டிகைக்கு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் தலா ஐந்தாயிரம் ரூபாய் வழங்க தமிழக அரசு பரிசீலினை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.. 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பொங்கல் பரிசுத் தொகை அதிகரிக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கான அறிவிப்பை தீபாவளி பண்டிகையின் போது முதலமைச்சர் அறிவிப்பார் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு 12,000 கோடி ரூபாய் நிதி தேவைப்படும் என கணக்கிடப்பட்டுள்ளதாகவும் அதற்கான நிதி ஆதாரங்களை உருவாக்க நிதித்துறைக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. வரும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு 2026 பொங்கல் பரிசு தொகுப்பாக இந்த 5000 ரூபாய் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது..
இதற்கான அறிவிப்பை தீபாவளி பண்டிகையின் போது முதலமைச்சர் அறிவிப்பார் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.. ஏற்கனவே தீபாவளி பரிசாக ஜிஎஸ்டி வரி குறைக்கப்படும் என இந்திய பிரதமர் அறிவித்துள்ள நிலையில் தமிழக அரசும் தீபாவளி பரிசுக்கு தயாராகி வருகிறது.. கடந்த 2025 பொங்கல் பண்டிகையின் போது பொங்கல் பரிசு தொகுப்பு எதுவும் அறிவிக்கப்படாததால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர் .
இந்த நிலையில் சட்டமன்றத் தேர்தலுக்கு ஒரு பரிசு போன்று இந்த அறிவிப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.. இதற்காக 12,000 கோடி ரூபாய் நிதி தேவைப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது அதற்கான நிதி ஆதாரங்களை மேற்கொள்ளுமாறு நிதித்துறையை தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. தமிழகத்தில் 2.2 கோடி அரிசி அட்டைகள் உள்ளன. இவர்களுக்கு பொங்கல் பரிசு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது..
இதில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி கடந்த 2006- 11 திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது. 2016-20 அந்த நான்காண்டுகளில் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்தபோது.. பொங்கல் பண்டிகையின் போது 1000 ரூபாய் வழங்கப்பட்டது. 2021 பொங்கலுக்கு அந்த ஆண்டு சட்டசபை தேர்தலை முன்னிட்டு அட்டைதாரர்களுக்கு தல 2500 ரூபாய் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது..