’இனி வார இறுதி நாள்களிலும் கோயில்கள் திறக்கப்பட்டிருக்கும்’ - தமிழக அரசு அறிவிப்பு

’இனி வார இறுதி நாள்களிலும் கோயில்கள் திறக்கப்பட்டிருக்கும்’ - தமிழக அரசு அறிவிப்பு
’இனி வார இறுதி நாள்களிலும் கோயில்கள் திறக்கப்பட்டிருக்கும்’ - தமிழக அரசு அறிவிப்பு

தமிழ்நாட்டில் கொரோனா கட்டுப்பாடு ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் கூடுதல் தளர்வுகள் குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தியிருந்தார். அந்த ஆலோசனை கூட்டத்தில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டுத்தலங்கள் திறக்கப்படுவது, அரசியல் கூட்டங்கள் நடப்பது, சமுதாய கூட்டங்கள் திறப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஆலோசனையின் முடிவில், அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாக வாரத்தில் திங்கள் முதல் வியாழன் வரை மட்டுமே கோயில்கள் திறக்கப்பட்டிருந்தன. இந்த வழக்கத்தை மாற்றி வெள்ளி, சனி, ஞாயிறுகளிலும் கோயில்களை திறக்க வேண்டுமென சில தினங்களுக்கு முன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கொன்று தொடுக்கப்பட்டிருந்தது. அதில் தமிழக அரசே முடிவெடுக்கலாம் என நீதிமன்றம் கூறியிருந்தது.

இந்நிலையில், கோயில்களை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமக்கள் கடற்கரைகளுக்கு செல்லவும் அனுமதி வழங்கப்படுள்ளது. இவையன்றி அரசியல் கூட்டங்கள், திருவிழாக்கள், சமுதாய, கலாசார நிகழ்வுகளுக்கான தடை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com