\
சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை: சிறப்பு ஒருங்கிணைப்பாளர் நியமனம்

சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை: சிறப்பு ஒருங்கிணைப்பாளர் நியமனம்

சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை: சிறப்பு ஒருங்கிணைப்பாளர் நியமனம்
Published on

சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ள சிறப்பு ஒருங்கிணைப்பாளரை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

சென்னையில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு அதிகாரிகளை தமிழக அரசு நியமனம் செய்து வருகிறது.

ஏற்கெனவே மண்டல வாரியாக ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளை தமிழக அரசு அமைத்தது. அதனைத் தொடர்ந்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் ஜெ.ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் நோய் கட்டுப்படுத்தப்படுத்தும் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். மேலும் சென்னையில் அதிகரித்து வரும் கொரனா தொற்றை தடுக்க ஐந்து அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டது. 

இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள சிறப்பு ஒருங்கிணைப்பாளராக நில நிர்வாக ஆணையராக பணியாற்றி வரும் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி பங்கஜ் குமார் பன்சால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com